Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நேர மாற்றம்

நேர மாற்றம்

நேர மாற்றம்

நேர மாற்றம்

ADDED : அக் 17, 2025 12:01 AM


Google News
கொங்கன் வழித்தடத்தில்இயக்கப்படும் ரயில்கள் அக். 21 முதல் பருவமழை அல்லாத கால அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி மதுரை வழியாக கொங்கன் வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரே ரயிலான திருநெல்வேலி - தாதர் ரயில், கீழ்க்காணும் நேர மாற்றத்திற்கு உட்படுகிறது. அக். 23 முதல், வியாழன் தோறும் இரவு 8:40 மணிக்கு தாதரில் இருந்து புறப்படும் ரயில் (22629), சனிக்கிழமை அதிகாலை 12:05 மணிக்கு திண்டுக்கல், 1:10 மணிக்கு மதுரை, 1:43 மணிக்கு விருதுநகர், 2:13 மணிக்கு கோவில்பட்டி வழியாக அதிகாலை 3:55 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.

மறுமார்க்கத்தில் புதன் தோறும் காலை 7:20 மணிக்கு புறப்படும் ரயில் (22630), மறுநாள் மாலை 5:05 மணிக்கு பதிலாக மதியம் 3:10 மணிக்கு தாதர் செல்லும். கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வந்து செல்லும் நேரத்தில் மாற்றம் இல்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us