Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

ADDED : ஜூன் 16, 2024 05:12 AM


Google News
கோயில்

கும்பாபிஷேகம்: பாலநாகம்மாள் கோயில், முத்துராமலிங்கபுரம், மதுரை, காலை 10:30 முதல் 11:30 மணிக்குள்.

கும்பாபிஷேகம்: சித்தி விநாயகர், காளியம்மன் கோயில், கப்பலுார், நடத்துபவர்: பழனிவேல்சிவம் ஆச்சாரியார், காலை 10:30 முதல் 11:00 மணிக்குள்.

கும்பாபிஷேகம் - யாக பூஜை: விசாலாட்சி அம்பிகா காசி விஸ்வநாதர் சுவாமி கோயில், தெற்காவணிமூல வீதி, மதுரை, இரண்டாம் யாக பூஜை, காலை 9:00 மணி, மூன்றாம் யாக பூஜை, மாலை 4:25 மணி.

விசேஷ ஹோமம்: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, காலை 9:00 மணி.

பகவத் கீதை கற்பிக்கும் வாழ்க்கை பாடங்கள் - வாழ்வியல் பயிற்சி: இஸ்கான் கோயில், மணிநகரம், மதுரை, மாலை 6:00 மணி.

வைகாசி திருவிழா: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், விநாயகர் கோயிலுக்கு சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, காலை 9:00 மணி,அன்னவாகனத்தில் அம்மன் வீதி உலா, இரவு 7:00மணி, ஒயிலாட்டம், 8:00 மணி.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

ஸ்ரீராம பட்டாபிஷேகம் - கம்பராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி கல்யாணராமன், தியாகராஜர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கருமுத்து கண்ணன் நினைவு அறக்கட்டளை, அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

கண்ணதாசனின் ஆன்மிகமும், இலக்கியமும்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

காலா கீர்த்தனம்: நிகழ்த்துபவர் - துக்காராம் கணபதி மகாராஜ், விஸ்வாஸ் யாகசாலை, ஆண்டாள்புரம், மதுரை, காலை 10:00 மணி.

பக்தி யோகம்: நிகழ்த்துபவர் - ஜிதேஸ் சைதன்யா, ஸத்சங்கம், எஸ்.எஸ்.காலனி, ஏற்பாடு: சின்மயா மிஷன், ஸத்சங்கம், மாலை 6:30 மணி.

ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: நிகழ்த்துபவர் - சுவாமி குணார்னவானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

நாம சங்கீர்த்தனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, 23.டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, மாலை 4:00 மணி.

பொது

டி.ஆர்.மகாலிங்கம் நுாற்றாண்டு விழா - சிலை திறப்பு: டி.ஆர்.எம். சுகுமார் பவனம், தென்கரை, சோழவந்தான், தலைமை: வழக்கறிஞர் கோபாலன், சிலைதிறந்து வைப்பவர்: நடிகர் ராதாரவி, பங்கேற்பு: நடிகர் சங்கத்தலைவர் நாசர், ராஜேஷ், காலை 10:00 மணி, இன்னிசை கச்சேரி, மாலை 6:00 மணி.

டி.எஸ்.ஸ்ரீபால் பிறந்தநாள் விழா, 'திருக்குறள் - அருணன் உரை' நுால் வெளியீட்டு விழா: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: புதுச்சேரி பிரெஞ்சு ஆசியவியல் நிறுவன பேராசிரியர் நாச்சிமுத்து, சிறப்பு விருந்தினர்: சென்னை பல்கலை முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் அரங்க. ராமலிங்கம், காலை 9:30 மணி, நுால் வெளியீட்டுச் சிறப்புரை: எம்.பி., சு.வெங்கடேசன், மதியம் 12:00 மணி.

தொழில் வாய்ப்பு முகாம்: ஓட்டல் தமிழ்நாடு, புதுார் ரோடு, மதுரை, தலைமை: மதுரையர் இயக்க தலைவர் திருமுருகன், தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் முத்து, மதியம் 3:30 முதல் மாலை 6:30 மணி வரை.

குழந்தைகளுக்கான இந்தியன் அபாகஸ் பயிற்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பயிற்சியளிப்பவர்: கவிதா ரமேஷ், காலை 11:00 மணி.

தியாகி வேலுச்சாமி நினைவாக தேசியக் கொடிக் கம்பம் உருவாக்கம்: வ.உ.சி., திடல், எல்லீஸ்நகர், மதுரை, தலைவர்: முன்னாள் விமானப்படையினர் நலச்சங்க தலைவர் ரகுநாதன், கொடிக் கம்பம் திறப்பாளர்: கொல்கட்டா முன்னாள் எம்.பி., தேவபிரதா பிஸ்வாஸ்,ஏற்பாடு: நேதாஜி சுவாமிநாதன், காலை 8:00 மணி.

யாதவ வரன்கள் பெற்றோர் சந்திப்புக் கூட்டம்: யாதவர் சேவை மையம், வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: ஸ்ரீதர், காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை.

இலவச சமஸ்கிருத பேச்சுப் பயிற்சி: வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: சமஸ்கிருத பாரதி, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை.

முதலாம் ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறார்களுக்கு சிலம்பாட்ட போட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்குதல்: ராயல் பப்ளிக் பள்ளி, அண்ணா மெயின் ரோடு, பெத்தானியாபுரம், மதுரை, ஏற்பாடு: ஜெகம் சாரிடபிள் டிரஸ்ட், காலை 8:00 மணி.

சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் : தமிழ்நாடு சிறப்புக் காவல்படை மைதானம், புது நத்தம் ரோடு, மதுரை, ஏற்பாடு: மகாயோகம், மகா மகரிஷி அறக்கட்டளை, பங்கேற்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆயுதப்படை ஐ.ஜி., லட்சுமி, நடிகர் சூரி, மாலை 5:00 மணி.

மருத்துவம்

தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

இலவச எலும்பு மூட்டு பரிசோதனை முகாம்: ஸ்ரீ சாய் மருத்துவமனை, பொன்மேனி பைபாஸ் ரோடு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் கோபி மனோகர், காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் 80ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொது மருத்துவ, கண் சிகிச்சை, ரத்ததான முகாம்: பாலகுருகுலம் துவக்கப் பள்ளி, சுப்பிரமணியபுரம் 2வது மெயின் ரோடு, மதுரை, முன்னிலை: தமிழ் மாநில தலைவர் விஸ்வநாதன், துவக்கிவைப்போர்: கிளை புரவலர் சிவக்குமார், கிளைத் தலைவர் கண்ணன் குருசாமி, கிளை கேப்டன் பாண்டி, ஏற்பாடு: வடமலையான் மருத்துவமனை, மேக்ஸ்விசன் கண் மருத்துவமனை, ஜீவநதி அறக்கட்டளை, காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

விளையாட்டு

16 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி: மதுரை மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, திருப்பரங்குன்றம், காலை 9:00 மணி.

கண்காட்சி

அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us