ADDED : செப் 24, 2025 06:15 AM
நவராத்திரி விழா
வளையல் விற்ற லீலை அலங்காரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, கோமதி திருநாவுக்கரசுவின் சொற்பொழிவு, மாலை 4:30 மணி, கலை விழா, காலை 8:00 மணி முதல்.
கள்ளழகர் கோயில், அழகர்கோவில், உட்பிரகாரங்களில் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண சுந்தரவள்ளித் தாயார் உற்ஸவ புறப்பாடு, மாலை 6:00 மணி, கலை நிகழ்ச்சிகள், காலை 9:30 மணி முதல்.
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக அலங்காரம்: தேவி முத்தாலம்மன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
திருக்கல்யாண அலங்காரம்: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, சிறப்பு பூஜை, இரவு 7:00 மணி.
சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புது ராமநாதபுரம் ரோடு, மதுரை, சுவாமிக்கு மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரம், மாலை 6:00 மணி.
மகாலட்சுமி அலங்காரம்: மகா துர்கையம்மன் கோயில், சிலைமான், புளியங்குளம், மதுரை, கொலு மண்டபத்தில் அம்மனுக்கு சோடஸ உபசார பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி, பிரசாதம் வழங்குதல், இரவு 8:00 மணி.
ஸ்ரீனிவாச கல்யாண அலங்காரம்: நவநீத கிருஷ்ணன் கோயில், மகால் ரோடு, பால்மால் குறுக்குத்தெரு, மதுரை, மாலை 6:00 மணி முதல்.
அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, தயா காந்திமதியின் சொற்பொழிவு, மாலை 6:30 மணி.
சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, பெரியநாயகி அம்பாளுக்கு விஷேச அபிஷேகம், தீபாராதனை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, பரதநாட்டியம்: நிகழ்த்துபவர் - பிரியங்கா, இரவு 7:00 மணி.
சக்தி விநாயகர் கோயில், கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, கொலு வைத்தல், சிறப்பு பூஜை, காலை 10:00 மணி.
கள்ளர் திருக்கோல அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காளபரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, சிறப்பு பூஜை, இரவு 8:00 மணி.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி.
கீதா உபதேச அலங்காரம்: திரவுபதி அம்பாள் கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
மதுரை நகரத்தார் விடுதியில் சுவாமிக்கு ராஜேஸ்வரி அலங்காரம், ஆராதனை, வடக்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: நகரத்தார் விஜயதசமி விழாக்குழு, மாலை 6:00 மணி.
கண்ணப்ப நாயனார் அலங்காரம்: விசாலாட்சி காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மாலை 6:00 மணி.
63வது குருபூஜை மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, கொலு வைத்தல், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், திருவிளக்கு வழிபாடு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சணை, கூட்டு வழிபாடு, மாலை 5:00 மணி.
ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, பஜனை, ஸ்ரீதேவி மஹாத்மியம் பாராயணம், ஆரத்தி, புஷ்பாஞ்சலி, காலை 8:30 மணி, சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி.
சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, லலிதா சஹஸ்ரநாம பூஜை, காலை 6:30 மணி, கிரிஜாவின் 'சவுந்தர்யலஹரியில் அம்பாளின் மகிமை' சொற்பொழிவு, ஏற்பாடு: சின்மய தேவி குழு, மாலை 6:30 மணி.
கூடலழகர் கோயில், மதுரை, சிறப்பு அலங்காரத்தில் மதுரவள்ளித்தாயார் புறப்பாடு, கொடிமர மண்டபம் முன் வைக்கப்பட்டுள்ள கொலுவிற்கு சிறப்பு பூஜை, கலை நிகழ்ச்சிகள், மாலை 5:00 மணி.
மயில் வாகன அலங்காரம்: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, சிருங்கேரி மடம், பைபாஸ் ரோடு, மதுரை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், சுவாசினி பூஜை, காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.
கோயில்
ஜெயந்தி நவராத்திரி உற்ஸவம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, விடாயத்து சப்பரம் வீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.
ஜெயந்தி உற்ஸவம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச் சாவடி தெரு, வடக்கு மாசி வீதி, மதுரை, பல்லக்கு ராஜாங்கம், வடக்குவாசல் அனுமர் கோயில் வடக்கு மாரட் வீதி, காலை 8:00 மணி, வீணை மோகினி, அமிர்தமோகினி பத்தி உலாத்தல், மாலை 4:00 மணி, ராமாவதாரம் புஷ்ப வாகனத்தில் நான்கு மாசி வீதி உலா, இரவு 7:00 மணிக்கு மேல்.
புரட்டாசி பிரம்மோற்ஸவம் - கொடியேற்றம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 9:30 மணிக்கு மேல் 10:00 மணிக்குள், ரதத்திற்கு முகூர்த்தக்கால் நாட்டல், காலை 10:15 மணிக்கு மேல் 11:00 மணிக்குள்.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் - பார்வதி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
நவராத்திரி சிறப்பு வழிபாடு: லலிதா சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி
நாட்டு நலப்பணித்திட்டத்தை முன்னிட்டு யோகா, சிறப்புச் சொற்பொழிவு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, சிறப்பு விருந்தினர்கள்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மாநில இயக்குநர் செந்தில்குமார், மதுவிலக்கு போலீஸ் கண்காணிப்பாளர் பாஸ்கரன், காலை 9:30 மணி, 'கிளவுட் மைக்ரேஸன்' சவால்களை எதிர்கொள்ளுதல்: சிறப்பு விருந்தினர்: புட்னிக் டெக்னாலஜிஸ் திட்ட மேலாளர் சரவணக்குமார், ஏற்பாடு: கணினி பயன்பாட்டியல் துறை, காலை 10:00 மணி, கல்லுாரி நுாலகம் சார்பாக நன்மாணாக்கர் குழு 13ம் ஆண்டு துவக்க விழா, கல்லுாரி நுாலகம், தலைமை: முதல்வர் ராஜேஸ்வர பழனிசாமி, காலை 10:30 மணி.
நாட்டுநலப் பணித்திட்ட நாளை முன்னிட்டு பனை விதை நடும் விழா: மேலக்கால், மதுரை, சிறப்பு விருந்தினர்: பார்வை பவுண்டேஷன் குபேந்திரன், ஏற்பாடு: அருள் ஆனந்தர் கல்லுாரி, பார்வை பவுண்டேஷன், காலை 7:00 மணி.
டிஜிட்டல் வானங்கள் தொலைவிலுள்ள கட்டமைப்பின் எழுச்சி கருத்தரங்கம்: யாதவர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பார்க் பிளாசா குழுமம் நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், கருத்துரை: நெட்வெப்பே மேனேஜிங் பார்ட்னர் ஸ்ரீனிவாசன், தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை: செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், வாழ்த்துரை: தலைவர் ஜெயராமன், சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால், ஏற்பாடு: கணினி அறிவியல் துறை, காலை 10:00 மணி.
ஆரோக்கிய இளைஞர்கள்- ஆரோக்கிய நாடு: கல்லுாரி இடையேயான நிகழ்ச்சி: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ரேடியோ ஜாக்கி வாலு மணி, முன்னிலை: துணை முதல்வர் அருள்மேரி, காலை 9:00 மணி முதல்.
பொது
சலேசிய குருக்கள் பணிப்பொறுப்பேற்று பொன்விழா ஆண்டின் நன்றி விழா: லுார்து அன்னை சர்ச், கே.புதுார், மதுரை, தலைமை: மதுரை உயர் மறைமாவட்டம் பேராயர் ஆண்டனிசாமி சவரிமுத்து, திருப்பலி, மாலை 6:00 மணி.
'சிலப்பதிகாரமும், இயற்கை நீதியும்' கருத்தரங்கம்: நிகழ்த்துபவர் - முகம்மது முகைதீன், எம்.எம்.பி.ஏ., சங்க வளாகம், மதுரை உயர்நீதிமன்றம், மதுரை, பங்கேற்பு: தலைவர் ஐசக் மோகன்லால், பொதுச்செயலாளர் சரவணக்குமார், ஏற்பாடு: எம்.எம்.பி.ஏ., சங்கம், மாலை 5:00 மணி.
எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்களில் ஓட்டுநர்களை நியமிப்பதில் உள்ள குளறுபடிகளுக்கு தீர்வு காணாத ரயில்வே கோட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்: ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில், மதுரை, ஏற்பாடு: எஸ்.ஆர்.எம்.யூ., ஓடும் தொழிலாளர் பிரிவு, காலை 10:00 மணி.
மருத்துவம்
மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மஞ்சனக்காரத்தெரு, தெற்குமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.