Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

ADDED : செப் 13, 2025 04:35 AM


Google News
கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு தாயுமானவர் பாடல்கள்: நிகழ்த்துபவர் - கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பகவத் கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமக்கிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

பக்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.

லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் : நிகழ்த்துபவர் -- பிரசிதானந்தா சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை,ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 7:00 மணி முதல்.

பள்ளி, கல்லுாரி 36ம் ஆண்டு பட்டளிப்பு விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: அமைச்சர் மூர்த்தி, பங்கேற்பு: கல்லுாரி தலைவர் குருசாமி வெள்ளையன், பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், பொருளாளர் சுரேஷ்குமார், முதல்வர் ராஜேஸ்வர பழனிசாமி, காலை 10:00 மணி.

பொது புத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, சிறப்புரை: எம்.பி., கனிமொழி, பங்கேற்பு: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இந்துமதி, திட்ட இயக்குநர் வானதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அரவிந்த், மாலை 6:00 முதல் 9:00 மணி வரை, பள்ளி கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, ஏற்பாடு: தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம், மாவட்ட நிர்வாகம், கண்காட்சி நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

எழுத்தாளர் வீரலட்சுமியின் 3 நுால்கள் வெளியீடு: தமுக்கம் மைதானம், மதுரை, பங்கேற்பு: தியாகராஜர் கல்லுாரி தமிழ்த் துறை தலைவர் காந்திதுரை, மாலை 6:30 மணி.

இன்சூரன்ஸ் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா 70வது மாநாடு மற்றும் 137வது சந்திப்பு கூட்டம்: ஓட்டல் கோர்ட்யார்ட், அழகர்கோவில் ரோடு, மதுரை, துவக்கவுரை: தேசிய தலைவர் துரைசாமி, சிறப்புரை: நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் தலைமை செயல் இயக்குநர் கிரிஜா, மதுரை மாவட்ட இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் தலைவர் நாராயணன், செயலாளர் சீனிவாசன், காலை 8:30 மணி முதல்.

39வது அமைப்பு தின விழா, ரத்ததான முகாம் மற்றும் கருத்தரங்கம்: ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கம், மதுரை, ரத்ததான முகாம் துவங்கி வைப்பவர்: கலெக்டர் பிரவீன்குமார், காலை 9:00 மணி, கருத்தரங்கம்: கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை, தலைமை: தலைவர் சந்திரசேகரன், பங்கேற்பு: மாநில பொருளாளர் விஜயபாஸ்கர், ஏற்பாடு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், காலை 11:00 மணி.

பொதுப்பிரிவினருக்கான கழிவுகளிலிருந்து கலை போட்டிகள்: 7, என்.எம்.ஆர். கட்டடம், வல்லபாய் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, ஏற்பாடு: கல்பதரு, டி.வி.எஸ்., குழுமம், காலை 10:00 முதல் மதியம் 2:30 மணி வரை.

கண்காட்சி விவேகானந்தா சேலைகள் பண்டிகை விற்பனை: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us