ADDED : பிப் 02, 2024 12:22 AM
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி வட்டாரம் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மேலவளவில் பண்ணை இயந்திரங்கள் பராமரிப்பு குறித்து விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.
உதவி இயக்குநர் சுபாசாந்தி தலைமை வகித்தார். பேராசிரியர் கூடலிங்கம், பொறியியல் துறை உதவி பொறியாளர் மோகன்ராஜ், வெங்கடேஸ்வரா எண்டர்பிரைசஸ் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கம் நடந்தது. கால்நடை உதவி மருத்துவர் நிரஞ்சனா, துணை வேளாண் அலுவலர் தனசேகரன், வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜதுரை, கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


