ADDED : செப் 25, 2025 03:49 AM
பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தாவரவியல் துறை மற்றும் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் உலர்த்தப்பட்ட மலர் அலங்கார வடிவமைப்புகள் பயிற்சி முகாம் கல்லூரியில் நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார்.
துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார்.
தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ராவ், விஜய் பேசினர். பயிற்சியாளர்கள் சுரேஷ்குமார் சர்மா, சுவேதா சிங் பயிற்சி அளித்தனர்.
பேராசிரியர் பாக்யராஜ் நன்றி கூறினார். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.