ADDED : செப் 19, 2025 02:40 AM
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவியரை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் பொன்னி வரவேற்றார். இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி முதலாம் ஆண்டு மாணவிகளை வரவேற்றனர். வணிக வியல் கணினி மேம்பாட்டுத்துறை தலைவர் கிருஷ்ணாஸ்ரீ நன்றி கூறினார்.