Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கூட்டுறவு ஊழியர்களுக்கு போனஸ் எப்போது

கூட்டுறவு ஊழியர்களுக்கு போனஸ் எப்போது

கூட்டுறவு ஊழியர்களுக்கு போனஸ் எப்போது

கூட்டுறவு ஊழியர்களுக்கு போனஸ் எப்போது

ADDED : அக் 16, 2025 04:46 AM


Google News
மதுரை: தமிழகத்தில் மற்ற துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அக். 6 ல் அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் கூறியதாவது: 1965 ம் ஆண்டு போனஸ் சட்டத்தில் விலக்களித்து சம்பள உச்சவரம்பு தளர்த்தப்பட்டதால் ஆண்டுதோறும் கூட்டுறவு ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் வழங்குகிறது.

போக்குவரத்து கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மின்சார வாரிய ஊழியர்களுக்கு அக். 6ல் தமிழக அரசு போனஸ் அறிவித்தது. கூட்டுறவுத் துறை பணியாளர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டும் தீபாவளிக்கு சில நாட்கள் முன்பாக தான் போனஸ் வழங்கியது. ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ரூ.8400ல் இருந்து ரூ.16ஆயிரத்து 800 வரை கிடைக்கும். தீபாவளிக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் தற்போது வரை போனஸ் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். பண்டிகை முடிவதற்குள் போனஸ் வழங்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us