Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்து பகுதிகளில் மானாவாரி சாகுபடி ஊக்குவிக்கப்படுமா

குன்றத்து பகுதிகளில் மானாவாரி சாகுபடி ஊக்குவிக்கப்படுமா

குன்றத்து பகுதிகளில் மானாவாரி சாகுபடி ஊக்குவிக்கப்படுமா

குன்றத்து பகுதிகளில் மானாவாரி சாகுபடி ஊக்குவிக்கப்படுமா

ADDED : மே 25, 2025 05:12 AM


Google News
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள மானாவாரி விவசாயிகளை ஊக்குவிக்க நீண்ட கால பயிர் சாகுபடி திட்டம் அல்லது மானியத்துடன் கடன் வழங்கி மாற்றுத் தொழில் துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதியில் தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மானாவாரி கண்மாய்கள் உள்ளன. இதன் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாய் நிரம்பினால் ஒரு போகம் நெல் விவசாயம் செய்ய முடியும். இல்லையெனில் மாடுகளுக்கு சோளம் விதைக்கின்றனர். கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் இருப்பவர்கள் நெல், காய்கறிகள் பயிரிடுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மழையை நம்பி நெல் நாற்று பாவுகின்றனர். போதுமான மழை பெய்யவில்லையெனில் நாற்றுக்களை பாதி விலைக்கு விற்கும் நிலையும் ஏற்படுகிறது.

விற்பனையாகாமல் முற்றிய நாற்றுகள் மாடுகளுக்கு உணவாகிறது. ஆண்டுதோறும் நஷ்டம் அடைகின்றனர்.

கண்மாய் நீரை நம்பியுள்ள விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் இல்லை. மானாவாரி விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் வைகை அணை நீரை கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். மானாவாரி விவசாயிகளின் உற்பத்தி பொருளை நல்ல விலைக்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும். முழு மானியத்துடன் கூடிய கடன் வழங்கி கறவை மாடுகள், ஆடுகள் வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us