Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/கோவையைப் போல மதுரை சிறை வளாகத்தில்..  மாற்றம் வருமா? விளையாட்டுகளின் தேவை அதிகரித்து வருவதால்

கோவையைப் போல மதுரை சிறை வளாகத்தில்..  மாற்றம் வருமா? விளையாட்டுகளின் தேவை அதிகரித்து வருவதால்

கோவையைப் போல மதுரை சிறை வளாகத்தில்..  மாற்றம் வருமா? விளையாட்டுகளின் தேவை அதிகரித்து வருவதால்

கோவையைப் போல மதுரை சிறை வளாகத்தில்..  மாற்றம் வருமா? விளையாட்டுகளின் தேவை அதிகரித்து வருவதால்

UPDATED : டிச 05, 2025 09:10 AMADDED : டிச 05, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
மதுரை, : கோவை சிறை வளாகத்தை செம்மொழி பூங்கா, கிரிக்கெட் ஸ்டேடியமாக்கியது போல் மதுரை சிறை வளாகத்தையும் விளையாட்டுக்கான வளாகமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் வடக்கு தொகுதி (ரேஸ்கோர்ஸ் மைதானம்) தவிர மீதியுள்ள 9 தொகுதிகளில் தலா ரூ.3 கோடி மதிப்பில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என மூன்றாண்டுகளுக்கு முன் தமிழக அரசு தெரிவித்தது. மதுரை கிழக்கு சக்கிமங்கலத்தில் மினி ஸ்டேடியத்திற்கான பூமிபூஜை துவங்கப்பட்டு விட்டது. சோழவந்தானில் ஏற்கனவே மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு விட்டது. ஒரே இடத்தில் மொத்தமாக 6 ஏக்கருக்கும் அதிகமான இடம் தேவை என்பதால் மற்ற தொகுதிகளில் அமைப்பதற்கான முயற்சி நடந்தாலும் மதுரை மேற்கு, மத்திய தொகுதிகளில் இடத்தேர்வு அமையவில்லை.

14 ஏக்கர் பரப்புள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்து செல்வதற்கு கூட இடமின்றி அனைத்து பகுதிகளும் தடகள டிராக் ஆக, ஹாக்கி, ஜிம்னாஸ்டிக், நீச்சல்குளம் அரங்குகளாக மாற்றப்பட்டு விட்டன. கால்பந்து விளையாடுவதற்கான மைதான வசதியில்லை. அங்குள்ள சிறிய அரங்கில் விளையாட்டு விடுதி மாணவர்கள் பயிற்சி பெறுவதால் பிற மாணவர்கள் பயிற்சி பெறமுடியாது.

அகாடமி போதுமா ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு விளையாட்டை ஊக்கப்படுத்துவதற்காக அந்தந்த ஸ்டேடியங்களில் ஸ்டார் அகாடமியை உருவாக்கியுள்ளது தமிழக அரசு. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெயிட் லிப்டிங் பயிற்சிக்கான ஸ்டார் அகாடமி அமைத்தாலும் பயிற்சிக்கான இடவசதியில்லை. இதற்கு இண்டோர் வசதி தேவை. கூடவே ஜிம் பயிற்சியும் வேண்டும். 'ஸ்குவாஷ்' விளையாட்டுக்கான களமே இல்லாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்க முடியவில்லை. சென்னையை அடுத்து மதுரை, தென்மாவட்டங்களில் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள், கேரம் வீரர்கள் தேசிய, சர்வதேச போட்டிகளில் முன்னிலையில் உள்ளனர். சென்னை நேரு ஸ்டேடியத்தில் இருப்பதைப் போல 'ஹால் ஆப் செஸ்', 'ஹால் ஆப் கேரம்', 'ஹால் ஆப் பாக்ஸிங்' வளாகம் தனியாக அமைக்கலாம். இதற்கெல்லாம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இடமில்லை.

வளாகம் தேவை கோவை காந்திநகரில் 45 ஏக்கர் பரப்பளவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா சமீபத்தில் அமைக்கப்பட்டது. அடுத்து சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. 65 ஏக்கர் பரப்பில் உள்ள மதுரை மத்திய சிறை செம்பூருக்கு இடமாற உள்ளதால் இந்த இடத்தை விளையாட்டு வளாகமாக மாற்றினால் சென்னையை அடுத்து மதுரையும் விளையாட்டில் முன்னிலை பெறும்.

அரசின் கட்டுப்பாட்டில் இடமிருப்பதால் துணைமுதல்வர் உதயநிதியின் கீழ் உள்ள விளையாட்டுத்துறைக்கு மாற்றினால் தென்மாவட்ட வீரர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் அதிக வாய்ப்பு பெறுவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us