Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மகளிர் ஹாக்கி போட்டி

மகளிர் ஹாக்கி போட்டி

மகளிர் ஹாக்கி போட்டி

மகளிர் ஹாக்கி போட்டி

ADDED : அக் 05, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான மகளிர் ஹாக்கி போட்டிகள் எல்லீஸ்நகர் ஹாக்கி மைதானத்தில் நடந்தது.

முதல் அரையிறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி அணி 7 - 0 கோல் கணக்கில் யாதவர் கல்லுாரி அணியை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி அணி 1 - 0 கோல் கணக்கில் பாத்திமா கல்லுாரி அணியை வீழ்த்தியது. இறுதிப்போட்டியில் லேடிடோக் கல்லுாரி அணி 2 - 1 கோல் கணக்கில் அமெரிக்கன் கல்லுாரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மூன்றாமிடத்திற்கான போட்டியில் பாத்திமா கல்லுாரி அணி 6 - 0 கோல் கணக்கில் யாதவர் கல்லுாரி அணியை வீழ்த்தியது.

முதலிடம் பெற்ற மாணவிகளை முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, உடற்கல்வி இயக்குநர்கள் சாந்தாமீனா, ஹேமலதா, பயிற்சியாளர் முருகன் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us