/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு தானமாக யானை வழங்கல் தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு தானமாக யானை வழங்கல்
தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு தானமாக யானை வழங்கல்
தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு தானமாக யானை வழங்கல்
தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு தானமாக யானை வழங்கல்
ADDED : ஆக 03, 2024 04:41 AM
மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு தானமாக வழங்கப்பட்ட யானைக்கு குருமகா சன்னிதானம் முன்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் இருந்த யானை பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்தது. புதிய யானை வாங்க அரசு விதித்த கட்டுப்பாடுகளின் காரணமாக இதுவரை ஆதீன திருமடத்தில் யானை இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் யானைகளை பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இதனை அடுத்து திருச்சி சமயபுரத்தில் இருந்து 34 வயது லக்கி மணி என்ற பெண் யானையை தருமபுரம் ஆதீனத்திற்கு தானமாக தர யானையின் உரிமையாளர் சங்கர் முன் வந்தார்.
அதனையொட்டி, தருமபுரம் ஆதீன மடத்தில் யானை கொட்டகை அமைக்கப்பட்டு வனத்துறையிடம் உரிய அனுமதி பெறப்பட்டதை தொடர்ந்து யானைக்கு தருமபுரம் ஞானாம்பிகை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு நேற்று யானைக்கு சிறப்பு அலங்காரம் செய்து பசு, குதிரை, ஒட்டகம் ஆகிய மங்கள சின்னங்களுடன் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
அங்கு தருமபுரம் ஆதீனம் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் யானை ஞானாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் மாவட்ட யானைகள் பாதுகாப்பு குழு தலைவர் சிவகணேசன், வனவர் செல்லையன் உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.