Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ முற்றுகை போராட்டத்தில் தள்ளுமுள்ளு போலீஸ், கம்யூ., கட்சியினர் காயம்

முற்றுகை போராட்டத்தில் தள்ளுமுள்ளு போலீஸ், கம்யூ., கட்சியினர் காயம்

முற்றுகை போராட்டத்தில் தள்ளுமுள்ளு போலீஸ், கம்யூ., கட்சியினர் காயம்

முற்றுகை போராட்டத்தில் தள்ளுமுள்ளு போலீஸ், கம்யூ., கட்சியினர் காயம்

ADDED : ஆக 02, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் போலீஸ் மற்றும் கம்யூ., கட்சியினர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்த மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு மா.கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. டி.எஸ்.பி., திருப்பதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சீனிவாசன், இந்திய கம்யூ மாவட்ட செயலாளர் ஏ.சீனிவாசன், சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் திடீரென லைமை தபால் நிலையத்தில் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு ராமகிருஷ்ணன் கையில் காயம் ஏற்பட்டது. மேலும் ஏட்டு திலகரின் சீருடை கிழந்தது. அதேபோல் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஐயப்பன் தலையில் காயம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கம்யூ கட்சியினர் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 60 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us