/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/ நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் தாக்குதல் நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் தாக்குதல்
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் தாக்குதல்
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் தாக்குதல்
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் தாக்குதல்
ADDED : ஜூன் 27, 2025 03:18 AM
நாகப்பட்டினம்:நாகை மாவட்டம், செருதுாரில் இருந்து ஜூன் 25ல் செந்தில், 42, என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், ஐந்து பேர், சுரேஷ், 40, என்பவரது படகில், நான்கு பேர் என, ஒன்பது மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், கோடியக்கரைக்கு தென் கிழக்கில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அதிவேக இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்த இரு படகுகளில் வந்த ஆறு கடற்கொள்ளையர்கள், இரு படகுகளையும் சுற்றி வளைத்து ஆயுதங்களால் தாக்கி, மீன்பிடி வலைகள், உபகரணங்களை பறித்து சென்றனர். நேற்று காலை, கரை திரும்பிய மீனவர்கள், கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் புகார் அளித்தனர்.