ADDED : ஜூன் 30, 2024 02:10 AM
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் அருகே, புள்ளாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் அப்பாவு மனைவி பழனியம்மாள், 65. இவர், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு இளைஞர்கள், மூதாட்டி பழனியம்மாளிடம், ஆட்டின் விலையை கேட்பது போல் பேச்சுக்கொடுத்தனர். திடீரென ஒரு ஆட்டை துாக்கி அவர்கள் வந்த டூவீலரில் வைத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். மூதாட்டி சத்தம் போட்டதால், அருகிலிருந்த மக்கள் ஓடி வந்து ஆடு திருடர்களை சுற்றி வளைத்து, எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், சேலம், ஜான்சன்பேட்டையை சேர்ந்த நண்பர்கள் வெங்கடேஷ், 30, விஷ்ணு பிரசாத், 23, என்பது தெரியவந்தது. டூவீலரை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.