/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ உயிரிழப்பை தடுக்க மின்வாரிய ஊழியர்களுக்கு நவீன கருவி உயிரிழப்பை தடுக்க மின்வாரிய ஊழியர்களுக்கு நவீன கருவி
உயிரிழப்பை தடுக்க மின்வாரிய ஊழியர்களுக்கு நவீன கருவி
உயிரிழப்பை தடுக்க மின்வாரிய ஊழியர்களுக்கு நவீன கருவி
உயிரிழப்பை தடுக்க மின்வாரிய ஊழியர்களுக்கு நவீன கருவி
ADDED : ஜூன் 29, 2024 03:01 AM
ராசிபுரம்: மின்வாரிய ஊழியர்கள், மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுக்க, முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி வழங்கப்பட்டு வருகிறது.
ராசிபுரம் அலுவலகத்தில் நடந்த விழாவில், 50க்கும் மேற்பட்ட கேங் மேன்களுக்கு இந்த நவீன கருவி வழங்கப்பட்டது. நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் தலைமை வகித்து வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''இந்த கருவியை தலையிலோ, கையிலோ அணிந்து கொண்டு மின் கம்பங்களில் ஏறும்போது, மின்சாரம் பாய்ந்தால் அது எச்சரிக்கை ஒலி எழுப்பும். மின்சாரம் சென்று கொண்டிருக்கும் கம்பத்தில் தவறுதலாக ஏறிவிட்டாலும், அந்த இயந்திரம் எச்சரிக்கை ஒலி எழுப்பும். அளவுக்கு அதிகமாக, 'வோல்டேஜ்' வந்தால் சிவப்பு நிற, 'லைட்' எரிவதுடன், 'பீப் சவுண்ட்' எழுப்பி எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் விபத்து குறைய வாய்ப்புள்ளது. மின் கம்பத்தில் ஏறும்போது, இந்த கருவி ஒலி எழுப்பினால் உடனடியாக கீழே இறங்கி, மின்சாரம் உள்ளதா, என்பதை மறு பரிசோதனை செய்துவிட்டு மீண்டும் கம்பத்தில் ஏற வேண்டும்,'' என்றார்.