/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஐயப்பா சேவா சங்க நிர்வாக குழு கூட்டம் ஐயப்பா சேவா சங்க நிர்வாக குழு கூட்டம்
ஐயப்பா சேவா சங்க நிர்வாக குழு கூட்டம்
ஐயப்பா சேவா சங்க நிர்வாக குழு கூட்டம்
ஐயப்பா சேவா சங்க நிர்வாக குழு கூட்டம்
ADDED : ஜூன் 30, 2024 01:41 AM
குமாரபாளையம், ஜூன் 30-
குமாரபாளையத்தில், அகில பாரத ஐயப்பா சேவா சங்க மாவட்ட நிர்வாக குழு கூட்டம், மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் தலைமையில் நடந்தது. இதில், அவர் பேசுகையில், ''சபரிமலை மகரவிளக்கு சீசனில், ஒரு கோடி பக்தர்களுக்கும் மேல் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
ஆனால், ஒரு நாளைக்கு, 80,000 பேருக்கு மட்டுமே, 'ஆன்லைனில்' தேவசம் போர்டு அனுமதி கொடுத்துள்ளது. இந்த உத்தரவை கடைப்பிடித்தால், இந்த சீசனில், 80 லட்சம் பேர் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய முடியும். மாலை போட்டு விரதமிருக்கும் மீதமுள்ள, 50 லட்சம் பக்தர்கள் ஆண்டு முழுதும், விரதம் இருக்க வேண்டும் என தேவசம் போர்டு நினைக்கிறதா? இந்த உத்திரவை வாபஸ் பெற வேண்டும்,'' என்றார்.
மாவட்ட தலைவர் பிரபு, மத்திய, மாநில துணைத்தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்ட பொருளாளர் செங்கோட்டையன் உள்பட பலர் பங்கேற்றனர்.