/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஆம்னி வேன் கண்ணாடியை உடைத்த மூவர் மீது வழக்கு ஆம்னி வேன் கண்ணாடியை உடைத்த மூவர் மீது வழக்கு
ஆம்னி வேன் கண்ணாடியை உடைத்த மூவர் மீது வழக்கு
ஆம்னி வேன் கண்ணாடியை உடைத்த மூவர் மீது வழக்கு
ஆம்னி வேன் கண்ணாடியை உடைத்த மூவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 28, 2024 01:18 AM
ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், நல்லுார் அருகே கொண்டரசம் பாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன், 41, விவசாயி. இவர் தனது சொந்தமான ஆம்னி வேனில், சோழசிராமணி சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை, வீட்டுக்கு திரும்பினார். அப்போது, கள்ளங்காடு புதுார் பிரிவு ரோடு அருகே நல்லப்பநாயக்கன்பாளையத்தை சதீஷ்குமார், 32, கணபதி, 27, பிரவீன், 27, ஆகியோர் சாலை நடுவே போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது விஸ்வநாதன் வழிவிடக்கோரி ஹாரன் அடித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், கணபதி, பிரவீன் சேர்ந்து ஆம்னி வேனின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர்.
இதுகுறித்து, விஸ்வநாதன் கொடுத்த புகார்படி, நல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.