/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல் நகர்மன்ற கூட்டம் 99 தீர்மானம் நிறைவேற்றம் நாமக்கல் நகர்மன்ற கூட்டம் 99 தீர்மானம் நிறைவேற்றம்
நாமக்கல் நகர்மன்ற கூட்டம் 99 தீர்மானம் நிறைவேற்றம்
நாமக்கல் நகர்மன்ற கூட்டம் 99 தீர்மானம் நிறைவேற்றம்
நாமக்கல் நகர்மன்ற கூட்டம் 99 தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : ஜூன் 29, 2024 02:23 AM
நாமக்கல்: லோக்சபா தேர்தலுக்கு பின், நாமக்கல் நகராட்சி கூட்ட அரங்கில், சாதாரண நகர்மன்ற கூட்டம், நேற்று நடந்தது. சேர்மன் கலாநிதி தலைமை வகித்தார். கமிஷனர்
சென்னுகிருஷ்ணன், துணை தலைவர் பூபதி ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, நகராட்சி பகுதிகளில் கொசுவை ஒழிக்க, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 200 லி., கொசுப்புழு ஒழிப்பு மருந்து கொள்முதல் செய்வது, நாமக்கல் நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட, ஒன்பது ஊராட்சிகளில் குடிநீர் குழாய் பதித்து, மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட, 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.