சரக்கு ரயிலில் வந்த 1,969 டன் நெல்
சரக்கு ரயிலில் வந்த 1,969 டன் நெல்
சரக்கு ரயிலில் வந்த 1,969 டன் நெல்
ADDED : அக் 07, 2025 01:45 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, சர்க்கரை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், தவிடு, கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும் பெரும்பாலும் வடமாநிலங்கள், தஞ்சாவூர், கடலுாரில் இருந்து சரக்கு ரயில் மூலம் வரவழைக்கப்படுகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்ட ரேஷன் கடைகளின் அரிசி தேவைக்காக, கடலுாரில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 1,969 டன் நெல் மூட்டைகளை, நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வாங்கிவரப்பட்டது. அங்கிருந்து, 100க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் செயல்படும் அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.


