/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தி.கோட்டில் பாதையோர கடை அமைக்க 9 இடங்கள் அறிவிப்பு தி.கோட்டில் பாதையோர கடை அமைக்க 9 இடங்கள் அறிவிப்பு
தி.கோட்டில் பாதையோர கடை அமைக்க 9 இடங்கள் அறிவிப்பு
தி.கோட்டில் பாதையோர கடை அமைக்க 9 இடங்கள் அறிவிப்பு
தி.கோட்டில் பாதையோர கடை அமைக்க 9 இடங்கள் அறிவிப்பு
ADDED : செப் 25, 2025 02:23 AM
திருச்செங்கோடு :திருச்செங்கோட்டில், பண்டிகை காலங்களில் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தஆலோசனை கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தார். கமிஷனர் வாசுதேவன், திருச்செங்கோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடைபாதை வியாபாரிகள், புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், வாலரைகேட், ஈரோடு ரோடு வாரச்சந்தை அருகில், சங்ககிரி ரோடு பட்டறை மேடு பகுதி, உழவர் சந்தை, நாமக்கல் ரோடு அண்ணா பூங்கா, சந்தைப்பேட்டை, சீதாராம்பாளையம் ஆகிய, ஒன்பது இடங்களில் மட்டும் கடைகள் போட்டு வியாபாரம் செய்துகொள்ளலாம்.
அரசு தலைமை மருத்துவமனை அருகில், பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகில், ஆனங்கூர் ரோடு எம்.எல்.ஏ., தொகுதி அலுவலக சாலை, ஈரோடு ரோடு பயணியர் மாளிகை, சேலம் ரோடு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பழைய சேலம் ரோடு சின்னபாவடி சந்து, கொக்கராயன்பேட்டை ரோடு ஆகிய, எட்டு இடங்களில் பாதை ஓரத்தில் கட்டாயமாக கடைகள் போட்டு விற்பனை செய்ய கூடாது.
மேலும், பாதையோர கடைகள் போட்டு வியாபாரம் செய்பவர்கள், நிர்ணயிக்கப்பட்ட வியாபார கட்டணத்தை நகராட்சியில் செலுத்தி விண்ணப்பித்து வியாபார சான்று மற்றும் அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கபட்டது.