/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பள்ளியில் ஆதார் விண்ணப்பித்தல் முகாம்பள்ளியில் ஆதார் விண்ணப்பித்தல் முகாம்
பள்ளியில் ஆதார் விண்ணப்பித்தல் முகாம்
பள்ளியில் ஆதார் விண்ணப்பித்தல் முகாம்
பள்ளியில் ஆதார் விண்ணப்பித்தல் முகாம்
ADDED : பிப் 25, 2024 04:08 AM
கரூர்: கரூர், தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய ஆதார் விண்ணப்பித்தல் மற்றும் பயோ மெட்ரிக் புதுப்பித்தல் முகாம் நடந்தது.
டி.ஆர்.ஓ., கண்ணன் முகாமை ஆய்வு செய்தார். அதன் அவர் கூறியதாவது: கரூர் மாவட்ட எல்காட் நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட, 16 பதிவு அப்டேட்டிங் கிட் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஆதார் பதிவு, ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பித்தல் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கருவிகளை கொண்டு அந்தந்த ஒன்றியங்களில் உள்ள பள்ளியில் மையம் துவங்கிட வேண்டும். மாவட்டத்தில், 822 அரசு பள்ளிகள், 60 அரசு உதவி பெறும் பள்ளிகள், 187 தனியார் பள்ளி என மொத்தம், 1,069 பள்ளிகள் உள்ளன. மாணவர்கள் ஆதார் பதிவு மேற்கொள்ளும் பொருட்டு, அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கே சென்று ஆதார் பதிவு, ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காமாட்சி, உதவி திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.