/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குறிஞ்சி பள்ளி மாணவருக்கு நடிகர் விஜய் பாராட்டு குறிஞ்சி பள்ளி மாணவருக்கு நடிகர் விஜய் பாராட்டு
குறிஞ்சி பள்ளி மாணவருக்கு நடிகர் விஜய் பாராட்டு
குறிஞ்சி பள்ளி மாணவருக்கு நடிகர் விஜய் பாராட்டு
குறிஞ்சி பள்ளி மாணவருக்கு நடிகர் விஜய் பாராட்டு
ADDED : ஜூன் 16, 2025 07:32 AM
நாமக்கல்: நாமக்கல் காவேட்டிப்பட்டியில், குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ., பள்ளி, குறிஞ்சி நீட் அகாடமி போன்ற கல்வி குழுமங்களுடன், சீனியர் ஆசிரியர்கள், இயக்குனர்களை கொண்டு மாணவ, மாணவியருக்கு சிறந்த முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இதனால் இங்கு படிக்கும் மாணவர்கள், டாக்டர், இன்ஜினியர், அரசு துறையில் பணிபுரியும் அளவுக்கு உருவாகி வருகின்றனர். இப்பள்ளியில் படித்த, 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் டாக்டராகி உள்ளனர். தற்போது, 'நீட்' வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவன் சக்தி, 600க்கு, 593 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். அந்த மாணவரை, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், விருது வழங்கி பாராட்டினார். விருது வாங்கிய மாணவன் சக்தியை, பள்ளி தாளாளர் தங்கவேல் கவுரவித்தார்.