/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கல் சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கல்
சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கல்
சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கல்
சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கல்
ADDED : செப் 23, 2025 02:12 AM
வெண்ணந்துார், நீச்சல் பழக சென்ற சகோதரர்கள், நீரில் மூழ்கி பலியாகினர். அவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து, தலா, மூன்று லட்சம் ரூபாயை, எம்.பி., ராஜேஸ்குமார் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அடுத்த மின்னக்கல், வாய்க்கால் பட்டறையை சேர்ந்த சுப்பிரமணி மகன்கள் நிஷாந்த், 23, பிரசாந்த், 19; கல்லுாரி மாணவர்கள். இவர்கள் இருவரும், கடந்த, 20ல், சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே பைரோஜி பகுதியில் உள்ள குட்டையில் நீச்சல் பழக சென்றனர். அப்போது இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவர்களது குடும்பத்தினருக்கு, தலா, மூன்று லட்சம் ரூபாயை, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, நேற்று மதியம், நிவாரண நிதி, ஆறு லட்சம் ரூபாயை, உயிரிழந்த சகோதரர்களின் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, வெண்ணந்துார் ஆத்ம குழு தலைவர் துரைசாமி, பி.டி.ஓ.,க்கள் வனிதா, கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.