/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/குளிக்கவும் முடியல; துவைக்கவும் முடியல ஆகாயத்தாமரையால் மக்கள் கடும் அவதிகுளிக்கவும் முடியல; துவைக்கவும் முடியல ஆகாயத்தாமரையால் மக்கள் கடும் அவதி
குளிக்கவும் முடியல; துவைக்கவும் முடியல ஆகாயத்தாமரையால் மக்கள் கடும் அவதி
குளிக்கவும் முடியல; துவைக்கவும் முடியல ஆகாயத்தாமரையால் மக்கள் கடும் அவதி
குளிக்கவும் முடியல; துவைக்கவும் முடியல ஆகாயத்தாமரையால் மக்கள் கடும் அவதி
ADDED : ஜூன் 28, 2024 01:16 AM
பள்ளிப்பாளையம், பெரியார் நகர் ஆற்று பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படித்துறையை சுற்றிலும், ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் துணி துவைக்கவும், குளிக்கவும் முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பள்ளிப்பாளையத்தில் ஆற்றுப்பகுதியான ஆவாரங்காடு, காவிரி, வசந்த நகர், பெரியார் நகர் பகுதியில், பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. காவிரி ஆற்று தண்ணீரில் வரும் ஆகாயத்தாமரை, இந்த படித்துறையை சுற்றிலும் கடந்த ஒரு மாதமாக படர்ந்து காணப்படுகிறது.
படித்துறையை ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து உள்ளதால் துணி துவைக்கவும், குளிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆகாயத்தாமரைகள் படர்வதால், அதிலிருந்து விஷ பூச்சிகள் உலா வருவதால், அகற்ற நடவடிக்கை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.