/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பேரிடர் மீட்பு படையினர் செயல்முறை விளக்க முகாம் பேரிடர் மீட்பு படையினர் செயல்முறை விளக்க முகாம்
பேரிடர் மீட்பு படையினர் செயல்முறை விளக்க முகாம்
பேரிடர் மீட்பு படையினர் செயல்முறை விளக்க முகாம்
பேரிடர் மீட்பு படையினர் செயல்முறை விளக்க முகாம்
ADDED : செப் 26, 2025 01:52 AM
குமாரபாளையம்,குமாரபாளையம், காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காலங்களில், பொதுமக்கள் தங்களை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என, தேசிய பேரிடர் மீட்பு படையினர் செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.
குமாரபாளையம், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கரையோர பகுதியில் உள்ள கலைமகள் வீதி, பொன்னியம்மாள் சந்து, காவேரி நகர், மணிமேகலை தெரு, இந்திரா நகர், அண்ணா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்து பாதிக்கப்படுகின்றனர்.
வெள்ளப்பெருக்கு காலங்களில் பாதிக்கப்படும் மக்கள், தங்களை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பதை, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
நான்காவது பட்டாலியன் உதவி ஆய்வாளர் குல்தீப் யாதவ் தலைமை வகித்தார். காவிரி கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம், மழை காலங்களில் வீடுகளுக்குள் வரும் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்களிடம் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது எனவும், செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் முருகன் மற்றும் நில எடுப்பு தனி தாசில்தார் காரல் மார்க்ஸ், மண்டல துணை தாசில்தார் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.