/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல்லில் இன்று கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழுநாமக்கல்லில் இன்று கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு
நாமக்கல்லில் இன்று கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு
நாமக்கல்லில் இன்று கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு
நாமக்கல்லில் இன்று கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு
ADDED : பிப் 25, 2024 04:01 AM
நாமக்கல்: 'நாமக்கல்லில், இன்று கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடக்கிறது' என, மாவட்ட செயலர் ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழுக் கூட்டம் இன்று (பிப்., 25) மாலை, 5:00 மணிக்கு நாமக்கல் மோகனுார் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில் வரும், மார்ச், 1ல், தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், 'இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில், தேர்தலுக்கான திண்ணை பிரசாரம் பற்றியும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்
படுகிறது.
முன்னாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து செயலர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.