/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கார் மோதி விபத்து முதியவர் பரிதாப பலி கார் மோதி விபத்து முதியவர் பரிதாப பலி
கார் மோதி விபத்து முதியவர் பரிதாப பலி
கார் மோதி விபத்து முதியவர் பரிதாப பலி
கார் மோதி விபத்து முதியவர் பரிதாப பலி
ADDED : செப் 16, 2025 02:05 AM
நாமக்கல், நாமக்கல் அடுத்த வள்ளிபுரம் தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் மாரப்பன், 70; விவசாயியான இவர், கடந்த, 13ல், நாமக்கல் - பரமத்தி சாலையில், ரோட்டை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்தவரை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.