Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆண்டு தொடக்கத்தில் சராசரி மழையைவிட அதிகம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

ஆண்டு தொடக்கத்தில் சராசரி மழையைவிட அதிகம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

ஆண்டு தொடக்கத்தில் சராசரி மழையைவிட அதிகம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

ஆண்டு தொடக்கத்தில் சராசரி மழையைவிட அதிகம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

ADDED : பிப் 02, 2024 10:56 AM


Google News
நாமக்கல்: ''ஆண்டின் முதல் மாதத்தில் சராசரி மழையை விட அதிகம் பெய்துள்ளது,'' என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் உமா பேசினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு, 724.06 மி.மீ., தற்போது வரை, 10.69 மி.மீ., மழை பெறப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முடிய இயல்பு மழையளவை விட, 0.24 மி.மீ., அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. 2023 டிச., மாதம் வரை நெல், 4,804 ஹெக்டேர், சிறுதானியம், 78,024 ஹெக்டேர், பயறு வகைகள், 8,231 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள், 32,058 ஹெக்டேர், பருத்தி, 2,715 ஹெக்டேர், கரும்பு, 9,613 ஹெக்டேர் என மொத்தம், 1.34 லட்சம் ஹெக்டேரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை

விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்

பட்டுள்ளன.

தற்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் யூரியா, 5,262 மெ.டன், டி.ஏ.பி., 1,263 மெ.டன், முரேட் ஆப் பொட்டாஷ், 1,263 மெ.டன், சூப்பர் பாஸ்பேட், 391.35 மெ.டன், காம்ப்ளக்ஸ், 3,328 மெ.டன் என்ற அளவிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் மேற்கண்ட பயிர்களுக்கு உரிய பிரீமிய தொகையை வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுசேவை மையங்கள் மூலம் பிரீமிய தொகை செலுத்தி பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், டி.ஆர்.ஓ., சுமன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us