/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
ADDED : ஜூன் 30, 2024 02:08 AM
நாமக்கல், 'மாவட்ட விவசாயிகள், காரீப் பருவ பயிர்களுக்கு, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம், நடப்பு காரீப் பருவத்தில் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. விவசாயிகள் அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்து பயன்பெறலாம்.
தற்போது, நாமக்கல் மாவட்டத்தில் பாசிப்பயறு, நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், தக்காளி, மரவள்ளி, மஞ்சள் மற்றும் வாழை பயிர்கள் காரீப் பருவத்தில் இன்சூரன்ஸ் செய்துகொள்ள அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், தோட்டக்கலை பயிர்களில், சின்ன வெங்காயம், தக்காளி, மரவள்ளி, மஞ்சள், வாழை ஆகியவற்றுக்கு, விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்து பயன் பெறலாம். காரீப் பருவத்தில் சாகுபடி மேற்கொள்ள கடன்பெறும் விவசாயிகள், அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ மற்றும் கடன்பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ, தேசிய பயிர்காப்பீடு இணையதளத்திலோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இன்சூரன்ஸ் செய்துகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.