/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'சிப்காட்' திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்'சிப்காட்' திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
'சிப்காட்' திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
'சிப்காட்' திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
'சிப்காட்' திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 12, 2024 11:25 AM
நாமக்கல்: மோகனுார் அருகே, 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்ததில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகாவில் உள்ள, வளையப்பட்டி, அரூர், ஆண்டாபுரம், பரளி, என். புதுப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோகனுார் பகுதியில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, 'சிப்காட் எதிர்ப்பு இயக்கம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, 51 கட்ட போராட்டங்களை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரூர் வி.ஏ.ஓ., அலுவலகம் முன், நேற்று, 52வது கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கொ.ம.தே.க., மோகனுார் ஒன்றிய செயலாளர் சிவகுமார், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி கோஷம் எழுப்பினர்.