Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ இலவச காது பரிசோதனை முகாம் நாமக்கல்லில் இன்று தொடக்கம்

இலவச காது பரிசோதனை முகாம் நாமக்கல்லில் இன்று தொடக்கம்

இலவச காது பரிசோதனை முகாம் நாமக்கல்லில் இன்று தொடக்கம்

இலவச காது பரிசோதனை முகாம் நாமக்கல்லில் இன்று தொடக்கம்

ADDED : மே 14, 2025 02:01 AM


Google News
நாமக்கல் நாமக்கல் - துறையூர் மெயின் ரோட்டில், கியூர் காது கருவி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், இலவச காது பரிசோதனை முகாம், இன்று தொடங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. முகாமில், இலவசமாக காது பரிசோதனை செய்யப்படும். மேலும், பழைய காது கருவிகளுக்கு மாற்றாக, 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில், புதிய காது கருவிகள் வழங்கப்படும்.

இதுகுறித்து, நிறுவனர் சுந்தரவேல் கூறியதாவது:-

காது பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம், சிறந்த முறையில் சரி செய்ய முடியும். எங்களின், 'கியூர் ஹியரிங் எய்டு' சென்டரில், சிறந்த முறையில் காது கேட்கும் திறன் பரிசோதனை செய்யப்பட்டு, தரமான முன்னணி நிறுவனங்களின் காது கருவிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

காதுகளில் இரைச்சல், கேட்கும் திறன் குறைதல் போன்ற பிரச்னைகளுக்கு துல்லியமாக பரிசோதித்து நிரந்தர தீர்வை தருகிறோம். எங்களிடம் மொபைல் போனுடன் பயன்படுத்தும் புளு டூத் காது கருவிகள், கண்ணுக்கு புலப்படாத சிறிய காது கருவிகள், ரீசார்ஜபுல் காது கருவிகள் குறைவான விலையில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us