/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரசு தட்டச்சு தேர்வு: 1,504 பேர் பங்கேற்பு அரசு தட்டச்சு தேர்வு: 1,504 பேர் பங்கேற்பு
அரசு தட்டச்சு தேர்வு: 1,504 பேர் பங்கேற்பு
அரசு தட்டச்சு தேர்வு: 1,504 பேர் பங்கேற்பு
அரசு தட்டச்சு தேர்வு: 1,504 பேர் பங்கேற்பு
ADDED : செப் 01, 2025 01:32 AM
குமாரபாளையம்:குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், அரசு தட்டச்சு தேர்வு இரண்டு நாட்கள் நடந்தது.
முதன்மை கண்காணிப்பாளராக, ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் விஜயகுமார், துணை கண்காணிப்பாளராக, எஸ்.எஸ்.எம்., பாலிடெக்னிக் கல்லுாரி பேராசிரியை முத்து வேலம்மையார் பணியாற்றினர். இந்த தேர்வில், 38 தட்டச்சு பயிலகங்கள் மூலம் மாணவர்கள் பங்கேற்றனர்.
இளநிலை ஆங்கிலம், 732, இளநிலை தமிழ், 280, முதுநிலை ஆங்கிலம், 290, முதுநிலை தமிழ், 189, முன் இளநிலை ஆங்கிலம், 11, முன் இளநிலை தமிழ், 1, அதிவேக தட்டச்சு தமிழ், 1 என, 1,504 தேர்வர்கள், குமாரபாளையம், பவானி, சங்ககிரி, இடைப்பாடி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து
பங்கேற்றனர்.