/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு நீதிபதி வேண்டுகோள்நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு நீதிபதி வேண்டுகோள்
நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு நீதிபதி வேண்டுகோள்
நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு நீதிபதி வேண்டுகோள்
நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு நீதிபதி வேண்டுகோள்
ADDED : பிப் 02, 2024 10:55 AM
நாமக்கல்: நாமக்கல் அரசு சட்டக் கல்லுாரி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லுாரியிலும், தனியார் மகளிர் கலைக் கல்லுாரியிலும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில், மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ் கலந்துகொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:
ஒவ்வொரு மனிதரும், பிறந்தநாள் முதல் இறக்கும் நிமிடம் வரை ஏதாவது ஒரு வகையில் நுகர்வோராகவே வாழ்கிறோம். நுகர்வோருக்கான உரிமைகளையும், பாதுகாப்பையும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழங்கியுள்ளது. இருப்பினும் நுகர்வோரை பாதிக்கும் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதனை போக்க நுகர்வோர் விழிப்புணர்வு மிக அவசியமானது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரி நிர்வாகங்களும், கல்லுாரியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு நுகர்வோர் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த பயிற்சியை நடத்த வேண்டும்.
இவ்வாறு வழங்கப்படும் பயிற்சியில், ஒவ்வொரு கல்லுாரியிலும் குறைந்தது, 50 மாணவ தன்னார்வலர்களை தேர்வு செய்ய வேண்டும். அனைத்து கல்லுாரிகளிலும் இருந்து தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களை, ஏதேனும் ஒரு கல்லுாரிக்கு அழைத்து சிறப்பு பயிற்சி வழங்கி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 321 கிராம ஊராட்சிகளிலும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பிரசாரத்தை மேற்கொள்ளும் சக்தி மாணவர்களுக்கு உள்ளது. அதனை ஒருங்கிணைக்கும் திறமை மாவட்டத்தில் உள்ள கல்லுாரிகளுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கல்லுாரி முதல்வர் கோவிந்தராஜ், பரமேஸ்வரன், நாமக்கல் அரசு சட்ட கல்லுாரி பேராசிரியர்கள் பிரியா, சுமதி, சுவர்ணலட்சுமி, கவுரவ விரிவுரையாளர்கள் சாஜ், பிரியங்கா, செவ்வந்தி, சவுமியா ஆகியோர் கலந்துகொண்டனர்.


