Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ இலக்கிய திறனறிவு தேர்வு: 8,120 மாணவர்கள் பங்கேற்பு

இலக்கிய திறனறிவு தேர்வு: 8,120 மாணவர்கள் பங்கேற்பு

இலக்கிய திறனறிவு தேர்வு: 8,120 மாணவர்கள் பங்கேற்பு

இலக்கிய திறனறிவு தேர்வு: 8,120 மாணவர்கள் பங்கேற்பு

ADDED : அக் 12, 2025 02:45 AM


Google News
நாமக்கல்: மாவட்டத்தில், 28 மையங்களில் நடந்த இலக்கிய திறனறிவு தேர்வில், 8,120 மாணவர்கள் பங்கேற்றனர். 426 பேர் கலந்து கொள்ளவில்லை.

தமிழ் மொழியின் இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வின் மூலம் சிறந்து விளங்கும் மாணவர்

களுக்கு மாதம், ரூ.1,500

ஊக்கத்தொகையாக அளிக்கப்

படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பி-யாய்டு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் ஆர்வத்-துடன் பங்கேற்கின்றனர். அந்த வகையில், தமிழ் மொழி இலக்-கிய திறனையும் மாணவர்களிடம் மேம்படுத்தும் வண்ணம் 'தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு' தமிழக பள்ளி கல்வித்-துறை சார்பில், அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் நடத்தப்படுகி-றது.

இத்தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை தமிழக அளவில், அக்டோ-பரில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2025-26ம் கல்வி-யாண்டுக்கான தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத்தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், மோகனுார், ராசிபுரம், சேந்த-மங்கலம், பரமத்தி, திருச்செங்கோடு, பள்ளிபாளையம் உள்பட, 15 ஒன்றியங்களில், 28 மையங்களில் தேர்வு நடந்தது. அதற்காக, 8,596 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வில், 8,170 பேர் கலந்து கொண்டனர். 426 தேர்வர்கள் பங்கேற்க-வில்லை. இத்தேர்வில், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்-பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழியாக மாதம், 1,500 ரூபாய் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us