ADDED : அக் 05, 2025 01:25 AM
குமாரபாளையம், குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., நடராஜன் உள்பட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, இடைப்பாடி சாலை உழவர் சந்தை அருகே, ஒருவர் அதிக விலைக்கு மது விற்றுக்கொண்டு இருந்தார்.
நேரில் சென்ற போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் அவர் கூலித்தொழிலாளி தன்ராஜ், 29, என்பது தெரியவந்தது.


