/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி ஜூலை 6ல் சென்னையில் 'மினி மாரத்தான்'q சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி ஜூலை 6ல் சென்னையில் 'மினி மாரத்தான்'q
சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி ஜூலை 6ல் சென்னையில் 'மினி மாரத்தான்'q
சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி ஜூலை 6ல் சென்னையில் 'மினி மாரத்தான்'q
சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி ஜூலை 6ல் சென்னையில் 'மினி மாரத்தான்'q
ADDED : ஜூன் 16, 2025 07:33 AM
நாமக்கல்: நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்ட அறிக்கை:
சர்வதேச கூட்டுறவு ஆண்டு மற்றும் சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழக கூட்டுறவுத்துறை சார்பில், 'மினி மாரத்தான்' போட்டி நடத்தப்படுகிறது.'ஒருவருக்காக எல்லோரும் ஓடுவோம், எல்லோரும் ஓடி கூட்டு உறவாகுவோம்' என்ற தலைப்பில், 'சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம், கூடுவோம், ஓடுவோம், கூட்டுறவால் உலகை வெல்வோம்' என்ற கருபொருளை மையமாக கொண்டு, இப்போட்டி நடத்தப்படுகிறது.
சென்னை தீவுத்திடலில் வரும், ஜூலை, 6ல் காலை, 5:30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமை வகிக்கிறார். இந்த போட்டி, சென்னை தீவுத்திடலில் தொடங்கி, சுவாமி சிவானந்தா சாலை வழியாக, மன்றோ சிலை சென்று, மீண்டும் சென்னை தீவுத்திடலில் வந்து முடிவடைகிறது.இப்போட்டியில், ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம். இப்போட்டிக்கான வயது வரம்பு, 18 முதல், 40, 40 வயது மற்றும் அதற்கு மேல் ஆகும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசாக, 30,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 20,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 10,000 ரூபாய் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே வழங்கப்படும்.இந்த மினிமாரத்தான் போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணமாக, 100 ரூபாய் செலுத்த வேண்டும். விபரங்களுக்கு, tncu08@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.