Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாவட்ட அளவில் பன்முக கலாசார போட்டி 15 வட்டாரங்களை சேர்ந்த மகளிர் குழு பங்கேற்பு

மாவட்ட அளவில் பன்முக கலாசார போட்டி 15 வட்டாரங்களை சேர்ந்த மகளிர் குழு பங்கேற்பு

மாவட்ட அளவில் பன்முக கலாசார போட்டி 15 வட்டாரங்களை சேர்ந்த மகளிர் குழு பங்கேற்பு

மாவட்ட அளவில் பன்முக கலாசார போட்டி 15 வட்டாரங்களை சேர்ந்த மகளிர் குழு பங்கேற்பு

ADDED : ஜன 24, 2024 11:14 AM


Google News
நாமக்கல்: மாவட்ட அளவிலான பன்முக கலாசார போட்டிகளில், 15 வட்டாரங்களில், முதலிடம் பெற்ற மகளிர் சுயஉதவிக்குழுவினர்

பங்கேற்றனர்.

தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு மூலம், தமிழகத்தில் உள்ள, 37 மாவட்டம், 388 வட்டாரம், 12,524 கிராம பஞ்.,களில், உடல் நலம், தன் சுத்தம், சுகாதாரம் பேணுதல், பாலின பாகுபாடு, சமூக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் நிறுவனம், சமூக அடிப்படையிலான அமைப்பு போன்ற பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.

கிராமப்புற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையே, ஒற்றுமையை மேம்படுத்தவும், சுகாதாரத்தை பேணி காக்கவும், சுற்றுப்புற சூழலை பாதுகாக்க, வீட்டுக்கு ஒரு மரம் கட்டாயம் வளர்க்கும் பழக்கத்தை உருவாக்கவும், உலக வெப்பமயமாதலை தடுக்கவும், பெருகி வரும் மாசு கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், பன்முக கலாசார போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, நாடகம், குழு பாடல், கயிறு இழுத்தல், கபடி போட்டி மற்றும் குழு கோலப்போட்டிகள், பஞ்., வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. வட்டார அளவில் வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவி குழுவினருக்கான, மாவட்ட அளவிலான பன்முக கலாசார போட்டி, நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நேற்று நடந்தது. அதில், 15 வட்டாரங்களை சேர்ந்த, மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்.

போட்டிகளை, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் செல்வராசு தலைமை வகித்து துவக்கி வைத்தார். போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்

வழங்கப்படும்.

அதில், முதலிடம் பிடிப்போர், மாநில அளவிலான பன்முக கலாசார போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். ஏற்பாடுகளை, உதவி திட்ட அலுவலர்கள் பெருமாள், காளிதாஸ், அன்பழகன், செல்வி, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்

செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us