ADDED : அக் 22, 2025 07:47 PM
நாமக்கல்: நாமக்கல் அடுத்த காமராஜபுரத்தை சேர்ந்தவர் கோபிகுமரன், 30; பத்திர எழுத்தரின் உதவியாளர். அக்., 19 காலை வேலைக்கு சென்றவர், இரவு வீடு திரும்பவில்லை. தீபாவளி தினமான, நேற்று முன்தினம், கொசவம்பட்டி நான்கு ரோடு, சத்யா நகர் பகுதியில், உடலில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டார்.
குற்றவாளிகளை பிடிக்க, நாமக்கல் எஸ்.பி., விமலா உத்தரவுப்படி, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.


