ADDED : செப் 04, 2025 02:00 AM
நாமக்கல், கிழக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் டாக்டர் செழியன் முன்னிலை வகித்தார்.
தமிழக காங்., முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தங்கபாலு பங்கேற்று, வரும், 7ல், நெல்லையில் நடக்கும் கட்சியின் மாநில மாநாடு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, லோக்சபாவில் ஓட்டு திருட்டு குறித்து, காங்., தலைவர் ராகுல், பிரியங்கா ஆகியோர் பேசிய பேச்சு குறித்த, 64 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டு,
நிர்வாகிகளுக்கு வழங்கி பேசினார்.
நெல்லையில், வரும், 7ல் நடக்கும் மாநில மாநாட்டிற்கு, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, திரளானோர் கலந்துகொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாமக்கல் மாநகர தலைவர் மோகன், ராசிபுரம் நகர தலைவர் முரளி, வட்டார தலைவர்கள்
உள்பட பலர் பங்கேற்றனர்.