Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ADDED : அக் 05, 2025 01:05 AM


Google News
நாமக்கல், புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர், முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாமக்கல் கோட்டை ஆஞ்சநேயருக்கு நேற்று காலை, 1,008 வடைமாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து நல்லெண்ணெய், மஞ்சள், திருமஞ்சள், சீயக்காய்த்துாள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டு, கனகாபி ேஷகத்துடன் நிறைவு பெற்றது. அதையடுத்து, சுவாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா செய்திருந்தார்.

* நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்பட்டி ஊராட்சியில் மெட்டாலா கிராமம் உள்ளது. மெட்டாலா கணவாய் பகுதியில் சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. நேற்று வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்திருந்தனர். துளசி மாலை, வடை மாலை அணிவித்து வழிபட்டனர்.

* சேந்தமங்கலம் அடுத்துள்ள நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல நைனா மலை உச்சியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாளுக்கும் பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.

* தலைமலை என்பது திருச்சி-

நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே உள்ள ஒரு மலைப்பகுதி. இங்கு சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமையான நேற்று அதிகாலை சுவாமிக்கு அபி ேஷகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

* மோகனுார், கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், சுவாமி பத்மாவதி தாயார் சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று சுவாமி, சந்தனகாப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மோகனுார் தாலுகா, மணப்பள்ளியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஆலயத்தில், மூலவருக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மோகனுார் அடுத்த வளையப்பட்டி பத்மாவதி மஹாலக்ஷ்மி தாயார் சமேத ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், மூலவர் பிரசன்ன வெங்கட் ரமண பெருமாளுக்கும், பத்மாவதி மகாலட்சுமி தாயாருக்கும் பால், தயிர், திருமஞ்சனம், கஸ்துாரி மஞ்சள், பச்சரிசிமாவு கரைசல், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் அபி ேஷகம் செய்யப்பட்டது.

தோளூர் சருவ மலையில் உள்ள ரங்கநாத சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகளுக்கும், பல்வேறு அபிஷேக ஆராதனை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us