Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொல்லிமலையில் அழிக்க முடியாத சாராய ஊறல்

கொல்லிமலையில் அழிக்க முடியாத சாராய ஊறல்

கொல்லிமலையில் அழிக்க முடியாத சாராய ஊறல்

கொல்லிமலையில் அழிக்க முடியாத சாராய ஊறல்

ADDED : செப் 04, 2025 02:02 AM


Google News
ராசிபுரம்,நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. இங்கு, மிளகு, பலாப்பழம் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் மிகவும் பிரபலம். அதேபோல், கொல்லிமலையில் தயார் செய்யப்படும் சாராய ஊறலும் இப்பகுதியில் பிரபலமானது. மலைவாழ் மக்கள் தங்களது வீடுகளில் நடக்கும் திருமணம், வளைகாப்பு, காதுகுத்தல், மஞ்சள் நீராடல் மற்றும் இறப்பு நிகழ்ச்சிக்கு, சொந்தமாக சாராயம் தயாரித்துக்கொள்கின்றனர்.

தங்களது விவசாய நிலங்களில் ஊறல்போட்டு வைத்துக்கொள்கின்றனர். பழக்கம் வழக்கம் என கூறினாலும், பல இடங்களில் இதை காரணமாக வைத்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். முக்கியமாக, இரவில் தங்கும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு, 'சுத்தமான சரக்கு' என்ற பெயரில் ஒரு லிட்டர், 600 ரூபாய் முதல், 10,00 ரூபாய் வரை விற்று விடுகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'குடும்ப நிகழ்ச்சிக்காக மட்டும் தயாரிக்கப்படும் சாராயத்தை, சில நேரம் விற்பனையும் செய்து விடுகின்றனர். சாராயம் தயாரிக்க ஆகும் செலவை, விற்பனை செய்து எடுத்து விடுகின்றனர். இது உள்ளூர் போலீசாருக்கும், மது விலக்கு போலீசாருக்கும் தெரிந்தே நடக்கிறது' என்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us