/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பவித்திரம் ஆட்டுச்சந்தையில் ரூ.12 லட்சத்திற்கு வர்த்தகம் பவித்திரம் ஆட்டுச்சந்தையில் ரூ.12 லட்சத்திற்கு வர்த்தகம்
பவித்திரம் ஆட்டுச்சந்தையில் ரூ.12 லட்சத்திற்கு வர்த்தகம்
பவித்திரம் ஆட்டுச்சந்தையில் ரூ.12 லட்சத்திற்கு வர்த்தகம்
பவித்திரம் ஆட்டுச்சந்தையில் ரூ.12 லட்சத்திற்கு வர்த்தகம்
ADDED : ஜூன் 17, 2025 02:08 AM
சேந்தமங்கலம், எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு முட்டாஞ்செட்டி, கஸ்துாரிப்பட்டி, நவலடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் வளர்க்கும் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆடுகளை வாங்கி செல்ல, முசிறி, தொட்டியம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இறைச்சிக்கடை வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
விசேஷ தினம் இருந்தால், இந்த சந்தை
யில் ஆடு விற்பனை களைக்கட்டும். சாதாரண நாட்களில் சந்தையில் விற்பனை குறைந்து காணப்படும். சில வாரங்களுக்கு முன், எருமப்பட்டி, முசிறி பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஆடு விற்பனை அதிகரித்திருந்தது. தற்போது, திருவிழா முடிந்ததால், ஆடு விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று நடந்த ஆட்டுச்சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைந்ததால், 12 லட்சம் ரூபாய்க்கு
மட்டுமே ஆடுகள் வர்த்தகமானது.