/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரவக்குறிச்சியில் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு பயிற்சி அரவக்குறிச்சியில் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
அரவக்குறிச்சியில் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
அரவக்குறிச்சியில் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
அரவக்குறிச்சியில் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : அக் 17, 2025 02:01 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறை சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ், அம்மாபட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மல்பெரி தொழில்நுட்ப சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
அரவக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா, விவசாயிகளுக்கு துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், விவசாயிகளுக்கு தொழில் நுட்ப விளக்கமும் வழங்கினார். எஸ்.ஆர்.எஸ். வேளாண் கல்லுாரி பூச்சிகள் துறை பேராசிரியர் ஐயம்பெருமாள், விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மல்பெரி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அம்மாபட்டியை சேர்ந்த ராமசாமி என்ற விவசாயி பட்டுப்புழு வளர்ப்பில் அவரது அனுபவத்தை விவசாயிகளிடம் கூறினார். பயிற்சியில், 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ் செய்திருந்தார்.


