தெரு நாய்களுக்கு விரைவில் கருத்தடை
தெரு நாய்களுக்கு விரைவில் கருத்தடை
தெரு நாய்களுக்கு விரைவில் கருத்தடை
ADDED : செப் 16, 2025 02:16 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில், 500க்கும் அதிகமான தெரு நாய்கள் உள்ளன. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் வரை நாய்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். எனவே, நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் என, இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். டவுன் பஞ்., மன்ற கூட்டத்திலும், கவுன்சிலர்கள் இந்த கோரிக்கையை முன் வைத்தனர்.
இதுகுறித்து, பேரூராட்சி ஊழியர்கள் கூறியதாவது:பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தெருக்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள், கால்நடை மருத்துவர்களை டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நாய்கள் பிடிக்கும் பணி நேற்று முதல் துவங்கியது. இதுவரை, 40க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு, மீண்டும் அதே பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. இப்பணி தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.