Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தெருக்கள் பெயர் மாற்றம் செய்து கிராம சபை கூட்டத்தில் தீர்-மானம்

தெருக்கள் பெயர் மாற்றம் செய்து கிராம சபை கூட்டத்தில் தீர்-மானம்

தெருக்கள் பெயர் மாற்றம் செய்து கிராம சபை கூட்டத்தில் தீர்-மானம்

தெருக்கள் பெயர் மாற்றம் செய்து கிராம சபை கூட்டத்தில் தீர்-மானம்

ADDED : அக் 12, 2025 02:41 AM


Google News
புதுச்சத்திரம்: புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம், தாளம்பாடி கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தில், கிராம சபை கூட்டம் நடந்தது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.பி., ராஜேஸ்-குமார், கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில் கூட்டம் நடந்தது. ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது: கிராம சபை கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இக்கூட்டத்தில், புதுசத்திரம் ஒன்றியம், தாளம்பாடி ஊராட்சியில், 7 குக்கிரா-மங்கள் உள்ளன.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி, கிராம சபை கூட்டத்தில் தாளம்பாடி குக்கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு என்பது மகாத்மா காந்தியடிகள் தெரு என்றும், போயர் தெரு என்பது திருவள்ளுவர் தெரு என்றும் பெயர் மாற்றும் செய்யப்படுகிறது. மேலும் எம்.ஜி.ஆர். காலனி என்பது எம்.ஜி.ஆர் நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. மாவட்ட கலெக்டர் ஆலோசனையின்படி, தீர்மானங்கள் இக்கூட்-டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து, சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் உறுதி-மொழி ஏற்றுக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் மல்லிகா, உதவி இயக்குனர் பிரபாகரன், மாவட்ட சமூகநல அலுவலர் காயத்திரி, மாவட்ட திட்ட அலுவலர் போர்ஷியா ரூபி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநி-திகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us