/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பாசனத்திற்கு தண்ணீர் வருவதால் தெற்குபாளையம் வாய்க்காலில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா பாசனத்திற்கு தண்ணீர் வருவதால் தெற்குபாளையம் வாய்க்காலில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா
பாசனத்திற்கு தண்ணீர் வருவதால் தெற்குபாளையம் வாய்க்காலில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா
பாசனத்திற்கு தண்ணீர் வருவதால் தெற்குபாளையம் வாய்க்காலில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா
பாசனத்திற்கு தண்ணீர் வருவதால் தெற்குபாளையம் வாய்க்காலில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா
ADDED : செப் 04, 2025 02:02 AM
பள்ளிப்பாளையம், மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால், குமாரபாளையம் தாலுகா பகுதியில் களியனூர், சமயசங்கிலி, எலந்தகுட்டை, மோளகவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், சின்னார்பாளையம், தெற்குபாளையம் உள்ளிட்ட, 25 கீ.மீ,, சுற்றுளவுக்கு செல்கிறது.
ஆண்டு தோறும் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வரும் போது, 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறும். கடந்த ஜூன் 30-ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது தொடர்ந்து, ஜூலை 1 தேதி, மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த இரண்டு மாதமாக வாயக்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வருகிறது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடிக்கு தயராகி வருகின்றனர். இந்நிலையில்., தெற்குபாளையம் பகுதியில் செல்லும் வாய்க்கால் பகுதியில் செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளன.
இது குறித்து மோளகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் கூறுகையில், ''தெற்குபாளையம் பகுதி
யில் வாய்க்காலில் வளர்ந்துள்ள செடிகள், முட்புதரால், தண்ணீரில் அடித்துவரப்படும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்படுகிறது. எனவே செடி மற்றும் முட்புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
இது குறித்து குமாரபாளையம் நீர்வளத்துறை உதவி பொறியாளர் கூறுகையில், ''பள்ளிப்பாளையம் பகுதியில் வாய்க்காலை கண்காணித்து வருகிறோம், முட்புதர், அடைப்பு இருந்தால் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது. தெற்குபாளையம் பகுதியில் வாய்க்காலில் வளர்ந்துள்ள செடிகள், முட்புதர்கள் விரைவில் அகற்றப்படும்,'' என்றார்.