/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ முதுமலை சாலையோரம் பஞ்சராகி நின்ற அரசு பஸ் முதுமலை சாலையோரம் பஞ்சராகி நின்ற அரசு பஸ்
முதுமலை சாலையோரம் பஞ்சராகி நின்ற அரசு பஸ்
முதுமலை சாலையோரம் பஞ்சராகி நின்ற அரசு பஸ்
முதுமலை சாலையோரம் பஞ்சராகி நின்ற அரசு பஸ்
ADDED : ஜூன் 25, 2024 11:54 PM
கூடலுார்:முதுமலை, தொரப்பள்ளி வன சோதனை சாவடி அருகே, அரசு பஸ் பஞ்சராகி நின்றதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
மசினகுடி, ஆனைக்கட்டி பகுதியிலிருந்து, ஊட்டி செல்லும் தமிழக அரசு பஸ், நேற்று காலை, 10:00 மணிக்கு முதுமலை கார்க்குடி பகுதியை கடந்து கூடலுார் நோக்கி வந்தது. முதுமலை தொரப்பள்ளி வன சோதனை சாவடி அருகே, அதன் பின் டயர்கள் இரண்டும் பஞ்சராகி, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்றது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதிருப்தி அடைந்த பயணிகள், பஸ்சிலிருந்து இறங்கி, 500 மீட்டர் நடந்து தொரப்பள்ளி பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து, ஆட்டோ மற்றும் அவ்வழியாக வந்த பஸ்கள் மூலம் கூடலுார், ஊட்டி பகுதிக்கு சென்றனர். தொடர்ந்து பஸ் ஊழியர்கள் பஞ்சரான டயகளை மாற்றி பஸ்ஸை இயக்கி சென்றனர்.
பயணிகள் கூறுகையில், 'சரியான பராமரிப்பு இல்லாததால், அரசு பஸ்சில் இது போன்ற பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. இதனால், பயணிகள் மட்டுமின்றி பஸ் ஊழியர்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, போக்குவரத்து துறை பஸ்களில் முழுமையாக பராமரித்து இயக்க வேண்டும்,' என்றனர்.