Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டமேற்றிய தொழு உரம் பயிர்கள் வளர்ச்சிக்கு நல்லது

ஊட்டமேற்றிய தொழு உரம் பயிர்கள் வளர்ச்சிக்கு நல்லது

ஊட்டமேற்றிய தொழு உரம் பயிர்கள் வளர்ச்சிக்கு நல்லது

ஊட்டமேற்றிய தொழு உரம் பயிர்கள் வளர்ச்சிக்கு நல்லது

ADDED : ஜூன் 12, 2024 10:26 PM


Google News
சூலுார்: 'ஊட்டமேற்றிய தொழு உரம் பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்,'என, வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஊட்டமேற்றிய தொழு உரங்களின் பயன்கள் குறித்து வேளாண் துறையினர் கூறியதாவது:

350 கிராம் நன்கு கலக்கிய தொழு உரத்துடன், 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ பொட்டாஷ் மூன்றையும் கலந்து ஒரு மாதம் மூடி வைக்க வேண்டும்.

அதனுடன் ஒன்பது கிலோ யூரியா கலந்து, விதை போடும் முன், கடைசி உழவுக்கு பின் மண்ணில் இட வேண்டும். அப்போது அந்த கலவை ஈரம் காக்கும் தன்மையை பெற்று, பயிர்களுக்கு செறிவூட்டப்பட்ட உரமாக கிடைப்பதுடன், பயிர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.

பருவம் பார்த்து பயிர்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். பயிரின் வளர்ச்சியில் பூப்பருவம் முக்கியம். அப்பருவத்தில் நீர் பற்றாக்குறை இல்லாமல் நீர் பாய்ச்சுவதால், மகசூல் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us