Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தென்னை மரங்களுக்கு இடையில் ஊடு பயிர் பயிரிடலாம்

தென்னை மரங்களுக்கு இடையில் ஊடு பயிர் பயிரிடலாம்

தென்னை மரங்களுக்கு இடையில் ஊடு பயிர் பயிரிடலாம்

தென்னை மரங்களுக்கு இடையில் ஊடு பயிர் பயிரிடலாம்

ADDED : ஜூன் 26, 2024 09:55 PM


Google News
சூலூர்: 'தோப்புகளில் குறிபிட்ட இடைவெளி விட்டு தென்னங்கன்றுகளை நடவு செய்து, அதற்கு இடையில் ஊடு பயிர்களை பயிரிடுவது அதிக பலனைத் தரும்,' என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தென்னை சாகுபடியாளர்கள் தென்னந்தோப்புகளில் தென்னையை மட்டும் சாகுபடி செய்வதால், தேங்காய் விலையில் ஏற்ற தாழ்வு, மற்றும் பல்வேறு எதிர்பாராத நிகழ்வுகளால் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர். அதனால், தென்னை சாகுபடி ஒரு எக்டரில் 7.5 மீ ., × 7.5 மீ., இடைவெளியில் தனிப்பயிராக, 175 எண்கள் நடவு செய்யலாம். தனிப்பயிராக பயிர் செய்வதால் மண்ணில் உள்ள சத்துக்கள், ஈரப்பதம், சூரிய ஒளி விரயமாகும்.

அதை தவிர்க்க, மீதமுள்ள நிலப்பரப்பில், ஊடுபயிராக கம்பு, காய்கறி பயிர்கள், சிறு தானியங்கள், வாழை, கோக்கோ, மஞ்சள், தீவன பயிரான நேப்பியர் , சோளம், மக்காச்சோளம், தட்டை உள்ளிட்டவைகளை பயிரிட்டு பயன் பெறலாம். மரத்தை சுற்றி கொடிப்பயிர்களையும் பயிரிடலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us